Recent Post

6/recent/ticker-posts

உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023 / UP GLOBAL INVESOTRS SUMMIT 2023

TAMIL

  • உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023 / UP GLOBAL INVESOTRS SUMMIT 2023: லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய வர்த்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்து, முதலீட்டாளர் உத்தரப்பிரதேசம் 2.0 திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 
  • உத்தரபிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு என்பது உத்தரப்பிரதேச மாநில அரசின் முன்னோடி முதலீட்டு மாநாடாகும். 
  • தொழில்துறையினர், கல்வியாளர்கள், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருகை தருவதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைக்கான வழிமுறைகள் கண்டறியப்படும்‌. நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.
  • இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாநில அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வித்துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் உத்தரப்பிரதேச அரசின் முயற்சியாகவே, பிப்ரவரி 10-12 ஆம் தேதி வரையிலான உத்தரப்பிரதேச சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023 நடத்தப்படுகிறது. 
  • உலக நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பலப்படுத்துவதற்கும் இந்த மாநாடு வழிவகை செய்யும்.
ENGLISH
  • Prime Minister Shri Narendra Modi inaugurated the Uttar Pradesh Global Investors Summit 2023 in Lucknow today. He also launched the Investor Uttar Pradesh 2.0 program during the event, inaugurating the Global Trade Fair.
  • Uttar Pradesh Global Investors Conference is the flagship investment conference of Uttar Pradesh State Government.
  • Industry, academia, and leaders from around the world will visit to explore business opportunities and avenues for partnership. The Prime Minister also toured the exhibition organized on the occasion.
  • Uttar Pradesh Governor Mrs. Anandi Ben Patel, Chief Minister Mr. Yogi Adityanath, Union Defense Minister Mr. Rajnath Singh, State Ministers, foreign representatives, industrialists and others participated in this program.
  • The Uttar Pradesh International Investors Conference 2023 is being held from February 10-12 as an initiative of the Uttar Pradesh government to bring together industrialists, policy makers, academic experts from all over the world under one umbrella.
  • The conference will facilitate the development of business opportunities in the countries of the world and strengthen the friendship between the countries.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel