இந்தியா, இலங்கை இடையேயான 7வது வருடாந்திர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 24ம் தேதி டெல்லியில் தொடங்கியது.
2 நாள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு துறை செயலாளர் கிரிதர் அரமானே, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னே ஆகியோர் தலைமை வகித்தனர்.
இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டுப் பயிற்சியின் போது இருநாடுகளும் தங்களது அனுபவங்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் இருதரப்பு ராணுவப் பயிற்சிகளின் தீவிரத்தை அதிகரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
0 Comments