'ஏற்றமிகு ஏழு திட்டங்கள்' கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு மருத்துவமனைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K.Stalin launched new projects under 'Seven Projects' and laid foundation stones for various hospital buildings
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ்,
ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் திட்டம், சென்னை மாநகரப் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி, தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை தொழில்முனைவோர்களாக ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.1,136.32 கோடியில் 44 புதிய மருத்துவமனைக் கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், கருணை அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
0 Comments