Recent Post

6/recent/ticker-posts

டிஜிட்டல் (மின்னணு) தடயஅறிவியல் ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகமும், தேசிய தடயஅறிவியல் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Directorate General of Goods and Services Tax Investigation and National University of Forensic Science sign MoU for setting up Digital (Electronic) Forensic Science Laboratory

TAMIL
  • டிஜிட்டல் (மின்னணு) தடயஅறிவியல் ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகமும், தேசிய தடயஅறிவியல் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. 
  • மேலும், இது தொடர்பான அறிவுசார் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை பரிமாறிக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. 
  • இந்த ஒப்பந்தத்தில், சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு முதன்மை தலைமை இயக்குநர் சுர்ஜித் புஜபால் மற்றும் தேசிய தடயஅறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜே எம் வியாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  
  • வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் அமலாக்கத் துறையினருக்கு தேவைப்படும் புலனாய்வு தகவல்களையும் வழங்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் தடயஅறிவியல் புலனாய்வு சம்பந்தமாக ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்களை இணைந்து மேற்கொள்வதோடு, ஒருவருக்கொருவர் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ENGLISH
  • The Directorate General of Goods and Services Tax Investigation and the National Forensic Science University have signed an MoU for setting up a digital (electronic) forensic science laboratory.
  • The agreement also provides for the exchange of related intellectual information, improved technical information and capacity building.
  • The agreement was signed by Surjit Bhujapal, Principal Director General, Goods and Services Tax Investigation and Dr. JM Vyas, Vice-Chancellor, National University of Forensic Sciences.
  • The agreement envisages improving technology in obtaining information on tax evaders and providing intelligence to law enforcement agencies to expedite action against them.
  • As per this MoU, both the organizations have agreed to jointly carry out research and training programs related to forensic investigation and provide technical assistance to each other.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel