புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் விளைவிக்க அல்லது தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு அதன் தரத்தைப் பாதுகாக்கும் விதமாக வழங்கப்படும் சான்று.
இந்த புவிசார் குறியீடு பெரும் பொருள், ஒரு மாநிலத்தின் தனித்துவம் பெற்ற சிறப்புமிக்கதாக இருக்கும்.
இதே போன்ற தனித்துவம் பெற்றக் காரணிகளின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாக்கும் மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு தமிழ்நாட்டின் பாரம்பரியமான வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு (முண்டு) மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் புவிசார் குறியீடு பெறுவதற்காக இந்த ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ள 10 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு கிடைக்குமாயின் இந்திய அளவில் அதிகப்படியான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநில தமிழ்நாடு தான்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு (முண்டு) மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து, தமிழ்நாடு இந்தியா அளவில் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது. கேரளா 36 தயாரிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய, முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும், வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக அணைக்கட்டு, கணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் உழவர் சந்தை திட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரையில், இலவம்பாடி முள்ளு கத்தரிக்கையை குறிப்பிட்டு அதன் அரிய குணங்களை பற்றி பேசி இருப்பார் என்ற தகவலையும் குறிப்பிட்டு இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் குண்டு மிளகாய் என்னும் இந்த வகை மிளகாய் சிறிய உருண்டை வடிவில் காணப்படும், தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான உருண்டை வடிவ மிளகாய் ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
ENGLISH
A Geographical Indication is a certification given to food traditionally grown or produced in a specific area to protect its quality. This geocode has great meaning and is unique to a state.
On the basis of similar distinguishing factors, mountain pundu grown in the Kodaikanal hill region of Dindigul district has been assigned a geocode. Following this, Dindigul Phut, Karaikudi Kandangi Salei and Srivilliputhur Balkowa have received the Central Government Geocode.
In this case, this year Vellore mullu katarikai, a tradition of Tamil Nadu, and Ramanathapuram gundu (mundu) chillies have been given geographical indication. Also, for the 10 products that have been applied for by the Tamil Nadu government this year to get a geographical code, Tamil Nadu is the state that has received the geographical code for the most products in India.
Vellore Ilavambadi mullu eggplant and Ramanathapuram Kundu (Mundu) chillies grown in Tamil Nadu for many years have been given a geographical code. With this, the number of Geocode approved products has gone up to 45 and Tamil Nadu is the 2nd in India. Karnataka has 46 maximum geocodes. Kerala is third with 36 products.
Vellore spiny brinjal, also known as Ilavambadi mullu brinjal, is a rare, prickly native brinjal variety, Ilavambadi brinjal has been cultivated for more than 200 years in Vellore district, especially in Ammankatu, Kanyambadi, Gudiyatham, KV Kuppam, Vellore, Gadbadi, Peranampatu.
It is noteworthy that in the speech given by Muthamizharinagar artist farmer's market project in Vellore district, he mentioned the information that he will talk about Ilavambadi mullu katharikai and its rare qualities.
Ramanathapuram Gundu Chilli This type of chilli is found in the shape of a small ball, popular in South Indian cuisine, round shaped chillies have been cultivated continuously for more than 200 years in the districts of Ramanathapuram, Pudukottai, Sivagangai, Virudhunagar, Thoothukudi.
0 Comments