அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இந்தியா சாா்பில் நடத்தப்படும் சிறுதானியங்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டு சிறுதானியங்களுக்கான சா்வதேச ஆண்டாக நடப்பு 2023-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்தில் சிறுதானியங்கள் கண்காட்சியை இந்தியா ஏற்பாடு செய்தது.
இந்தியாவில் பயிரிடும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் கொழுப்பு உள்ளடக்கம் குறித்து உலக அரங்குக்கு எடுத்துரைக்கும் விதமாக கண்காட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இக்கண்காட்சியில் பங்கேற்றனா். ஜ.நா. பொதுச் சபையின் பிரதிநிதிகள் நுழைவு வாயில் அருகே உள்ள கண்காட்சி அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 17) வரை சிறுதானியங்கள் கண்காட்சி நடைபெறும்.
0 Comments