கழிவுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை உருவாக்கும் என்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU WITH ENGINEERS INDIA TO DEVELOP WASTE PLANTS
MOU WITH ENGINEERS INDIA TO DEVELOP WASTE PLANTS: அமிர்த காலத்தில் வழிநடத்தும் சப்தரிஷி என்னும் ஏழு முன்னுரிமைகளுடன், மத்திய நிதி அமைச்சர், திருமதி நிர்மலா சீதாராமன், 2023-2024 பட்ஜெட்டை சமர்ப்பித்தார்.
'பசுமை வளர்ச்சி' பிரிவில், சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கோபர்தன் திட்டத்தின் கீழ், கழிவை செல்வமாக்கும் 500 புதிய ஆலைகள் நிறுவப்படவுள்ளன.
இவற்றில் அழுத்தப்பட்ட உயிரி வாயு நிலையங்கள் 200 ஆகும். நகர்ப்புற பகுதிகளில் 75-ம், சமுதாய மற்றும் தொகுப்பு அடிப்படையிலான 300 ஆலைகளும் இதில் அடங்கும். இதற்கான மொத்த முதலீடு ரூ.10,000 கோடியாக இருக்கும்.
பசுமை வளர்ச்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், என்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
10 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் திரு மனோஜ் ஜோஷி, என்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திருமிகு வர்திகா சுக்லா முன்னிலையில், அமைச்சகத்தின் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் திருமிகு ரூபா மிஸ்ரா, இஐஎல் நிர்வாக இயக்குனர் திரு ஆர் கே ரதி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ENGLISH
The Union Finance Minister, Mrs. Nirmala Sitharaman presented the Budget 2023-2024 with seven priorities of Saptarishi to guide the era of Amrita. In the 'green growth' segment, 500 new waste-to-wealth plants will be set up under the Gopardhan scheme to promote circular economy.
Of these, 200 are compressed biogas plants. These include 75 in urban areas and 300 community and cluster-based plants. The total investment for this will be Rs.10,000 crore.
As part of the 'Green Growth' programme, the Union Ministry of Housing and Urban Affairs has signed an MoU with Engineers India. The MoU will enable implementation of waste-to-power projects in cities with a population of more than 10 lakh.
The MoU was signed by Mr. Manoj Joshi, Secretary, Union Ministry of Housing and Urban Affairs, Ms. Vardika Shukla, Chairman and Managing Director, Engineers India, Ms. Roopa Mishra, Ministry's Urban Clean India Mission, and Mr. RK Rathi, Managing Director, EIL.
0 Comments