திருச்சி மாவட்டம் முசிறியில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு, மற்றும் வரப்பெற்ற புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல், மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை, காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழுக்கு பரிந்துரை செய்திருந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த முதல் காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்தது
0 Comments