Recent Post

6/recent/ticker-posts

ஜெர்மனி அதிபர் ஸ்கால்சுடன் பிரதமர் மோடி சந்திப்பு / PM Modi meets German Chancellor Schalz

  • பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாள் பயணமாக டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
  • பின்னர், ஜனாதிபதி மாளிகைக்கு வந்த ஸ்கால்சுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். 
  • இந்த சந்திப்பில், வர்த்தகம் மற்றும் முதலீடு, புதிய தொழில்நுட்பங்கள், சுத்தமான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் செலுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 
  • இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், 'உக்ரைன் போரின் தொடக்கத்தில் இருந்தே பேச்சுவார்த்தை மூலம் மோதலை தீர்க்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. எந்த ஒரு அமைதி நடவடிக்கையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது. 
  • ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான ஜெர்மனி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய ஆதாரமாகவும் திகழ்கிறது' என தெரிவித்துள்ளார். இன்று காலை பெங்களூரு செல்லும் ஸ்கால்ஸ், அங்கிருந்து மாலை ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார்.
  • ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுடனான சந்திப்பின் போது அவருக்கு பிரதமர் மோடி, மேகாலயா மாநிலத்தின் ஸ்டோல்ஸ் (கழுத்தை சுற்றி அணியும் துண்டு) மற்றும் நாகலாந்தின் சால்வையை பரிசாக வழங்கினார். இவ்விரு மாநிலங்களிலும் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel