Recent Post

6/recent/ticker-posts

ஷிமோகா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் / Prime Minister Modi inaugurated Shimoga Airport

  • கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ரூ.450 கோடியில் தாமரை வடிவத்தில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
  • இதில் உள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 775 ஏக்கர் பரப்பளவில் க‌ட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு கன்னட தேசியக் கவிஞர் குவெம்புவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்ற விமான நிலைய திறப்பு விழாவில், பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
  • இதையடுத்து பிரதமர் மோடி, ரூ.990 கோடியில் ஷிமோகா - ராணிபென்னூர் புதிய ரயில் வழித்தடத்துக்கும், ரூ.100 கோடியில் கோட்டேகன்குரு ரயில் பெட்டிபணிமனை மையத்துக்கும் அடிக்கல் நாட்டினார். ஷிமோகாவில் ரூ.895 கோடி மதிப்பிலான 44 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் தொடங்கி வைத்தார். 
  • பின்னர் பெலகாவிக்கு சென்ற மோடி, ஜல் ஜீவன் திட்ட‌த்தின் கீழ் ரூ.1,585 கோடியில் 315-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel