தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவ செயலி - செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியீடு / Tolkappiyam audio format app - Published by Semmozhi Tamil Research Institute
தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாகும். அதில் காணப்படும் சில வழக்காறுகள், இலக்கணக் கூறுகள், வாழ்க்கை மரபுகள் ஆகியவை சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டவை.
இதனால் அது 'தமிழ் முதல் நூல்' என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2021-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, தொல்காப்பியம் சார்ந்த செல்போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக சிஐசிடி தொல்காப்பியம் எழுத்து (PHONOLOGY & MORPHOLOGY MOBILE APPLICATION) என்ற
பெயரில், எழுத்து அதிகாரத்துக்கான துக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் செம்மொழி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயலியில் தொல்காப்பியப் பாடல்கள் இசையுடன் (முற்றோதல்) ஒலிக்கும்.
பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரத்தின் தொல்காப்பியம் எழுத்து ஆராய்ச்சிக் காண்டிகை உரையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் உரையை கேட்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
0 Comments