Recent Post

6/recent/ticker-posts

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற ஐ.நா.வில் தீர்மானம் / UN RESOLUTION TO EXIT RUSSIA FORCES FROM UKRAINE

  • ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் (பிப். 24) ஓராண்டு நிறைவடைகிறது. இப்போர் இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின் அண்டை நாடுகள் ரஷ்யா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியது.
  • அமெரிக்கா, பிரிட்டன் அடங்கிய நேட்டோ படையில் சேர உக்ரைன் விரும்பியது. இது தனது பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என ரஷ்யா கருதியது. உடனே உக்ரைன் மீது போர் தொடுத்தது. 
  • இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்தது. அப்போது உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
  • 193 உறுப்பினர்கள் நாடுகள் பங்கேற்றன. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் ஓட்டளித்தனர். எதிராக 7 நாடுகள் ஓட்டளித்தனர். 
  • இந்தியா, சீனா உள்பட 32 நாடுகள் தீர்மானத்தின் மீது நடந்த ஒட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவு இருந்ததால், தீர்மானம் நிறைவேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel