11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.19,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் / Ministry of Defense signs deal worth Rs 19,600 crore with domestic shipbuilders to procure 11 modern deep-sea patrol vessels and 6 missile vessels
தற்சார்பு இந்தியா என்ற இலக்கை வலப்படுத்தும் நடவடிக்கையாக, 11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை தாங்கி கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.19,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இன்று (2023 மார்ச் 30) கையெழுத்திட்டுள்ளது.
11 அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்து கப்பல்களை வாங்க கோவா கப்பல் கட்டும் நிறுவனம் (ஜிஎஸ்எல்) மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டும் (ஜிஆர்எஸ்இ) நிறுவனங்களுடன் ரூ. 9,781கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த 11 கப்பல்களில் 7 கப்பல்கள் ஜிஎஸ்எல் நிறுவனத்தின் மூலமாகவும், 4 கப்பல்கள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தின் மூலமாகவும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த கப்பல்கள் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல்களை (என்ஜிஎம்இ) வடிவமைக்க கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (சிஎஸ்எல்) ரூ. 9,805 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த கப்பல்கள் 2027 மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல்கள் அதிக ஆயுதங்களுடன் அதி வேகத்தில் தாக்குதல்களை நடத்த முடியும். எதிரிகளின் கப்பல்களையும், குறிப்பிட்ட இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன்படைத்தவையாக இவை திகழும்.
ENGLISH
In a move to strengthen the goal of a self-reliant India, the Ministry of Defense today (March 30, 2023) signed a deal worth Rs 19,600 crore with domestic shipbuilders to procure 11 modern deep-sea patrol vessels and 6 missile carriers.
Goa Shipbuilding (GSL) and Garden Reach Shipbuilding (GRSE) to procure 11 next-generation deep-sea patrol vessels for Rs. 9,781 crore worth the contract has been signed. Out of these 11 vessels, 7 vessels are being designed and manufactured locally by GSL and 4 vessels by GRSE. The vessels are expected to be fully designed and delivered by September 2026.
Cochin Shipbuilding Corporation (CSL) to design Next Generation Missile Vessels (NGMEs) for Rs. 9,805 crore worth of contract has been signed. The vessels are expected to be completed and commissioned in March 2027. These ships can carry out attacks at high speed with heavy weapons. These are capable of precision hitting enemy ships and specific targets.
0 Comments