சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பருவநிலை குறித்த பணிக்குழுவின் 2-வது கூட்டம் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் அரங்கில் நடைபெற்றது.
இதில் ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதைத்தவிர, 19 சர்வதேச அமைப்புகள் மற்றும் 9 நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கு கொண்ட இந்தோனோசியா, பிரேசில், அர்ஜெண்டினா, சீனா, ஐரோப்பிய யூனியன். தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, ஜப்பான், சவுதி அரோபியா, கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க், சிங்கப்பூர், ஸ்பெயின், ஓமன், நெதலாந்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை குறித்த தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
இதேபோல், சர்வதேச உணவு மற்றும் வேளாண் அமைப்புகள் ஐநாவின் வளர்ச்சித் திட்டம், ஆசிய மேம்பாட்டு வங்கி, சர்வதேச சூரிய சக்தி அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்று நீர்வள ஆதார மேலாண்மையில் சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதித்தனர்.
முதல்நாள் அமர்வில் நீர்வளங்களை புனரமைத்தல், மழைநீர் மேலாண்மை, நிலத்தடி நீர் மேலாண்மை, பருவநிலை மாறுதலுக்கேற்ற நீர் பயன்பாட்டு அணுகுமுறை, வறட்சி, வெள்ள மேலாண்மை, பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ENGLISH
The 2nd meeting of the Working Group on Environment and Sustainable Climate was held at Mahatma Mandir Arena, Gandhinagar, Gujarat. More than 130 representatives from 19 countries of the G20 organization participated in it. Apart from this, 19 international organizations and special invitees from 9 countries also participated in this meeting.
Indonesia, Brazil, Argentina, China, European Union participated in this meeting. Representatives from South Africa, France, Germany, Italy, Mexico, Japan, Saudi Arabia, Korea, Turkey, UK, USA, Denmark, Singapore, Spain, Oman, Netherlands and representatives of G20 member countries recorded their views on integrated water resource management.
Similarly, representatives from the International Food and Agriculture Organization, United Nations Development Program, Asian Development Bank, and International Solar Energy Organization also participated and discussed best practices in water resources management.
In the first day session papers were presented on topics including water resources restoration, rainwater management, groundwater management, climate change water use approach, drought, flood management, safe drinking water and sewage management.
0 Comments