Recent Post

6/recent/ticker-posts

ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு மாநாடு தொடக்கம் / 2nd Financial Framework Conference of G-20 begins

  • தற்போது ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இதையொட்டி, கல்வி, நிதி, எரிசக்தி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக, ஜி-20நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
  • ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதிகட்டமைப்பு பணிக் குழுவின் இரண்டு நாள் மாநாடு சென்னையில் தொடங்கியது.
  • இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் நட்புநாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
  • மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து அரசின் நிதித் துறை தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை வகித்தனர்.
  • வெவ்வேறு அமர்வுகளாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், உணவு, எரிசக்தி, பருவநிலை மாற்றம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel