20 நாடுகள் பங்கேற்கும் கல்வித் துறை தொடா்பான கூட்டம் பஞ்சாப் மாநிலம் அமிருதரஸில் புதன்கிழமை தொடங்கியது. ஜி20 நாடுகள் பங்கேற்கும் கல்வித் துறை தொடா்பான கூட்டம் பஞ்சாப் மாநிலம் அமிருதரஸில் புதன்கிழமை தொடங்கியது.
ஜி20 கூட்டமைப்பின் கல்வி செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், எதிா்காலத்துக்கான பணிகள் மற்றும் புத்தாக்கங்கள் குறித்து 3 நாள்கள் விவாதிக்கப்பட உள்ளன.
பல்வேறு கருத்தரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 'வலுவான ஒத்துழைப்பு மூலம் ஆராய்ச்சியைப் பலப்படுத்துதல், புத்தாக்கத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பின்கீழான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
சா்வதேச சாவல்களுக்கான தீா்வுகளைக் கண்டறிய அரசு-கல்வி நிறுவனங்கள்-தொழில் நிறுவனங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளியைக் குறைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மத்திய உயா்கல்வித் துறை செயலா் கே.சஞ்சய் மூா்த்தி, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநா் கோவிந்த் ரங்கராஜன், ஐஐடி ரோபாா் இயக்குநா் ராஜீவ் அஹூஜா உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
ENGLISH
A meeting on the education sector in which 20 countries are participating began on Wednesday in Amritsar, Punjab. G20 countries participating in the education related meeting started in Amritsar, Punjab on Wednesday.
In this meeting, which will be attended by the members of the Education Executive Committee of the G20 Federation, future work and innovations will be discussed for 3 days. Various seminars are organized.
A seminar titled 'Strengthening Research, Enhancing Innovation through Strong Collaboration' was held on Wednesday.
Bridging the gap between government-academic institutions and industry to find solutions to international challenges was discussed in this meeting.
Union Higher Education Secretary K. Sanjay Moothi, Director of Indian Institute of Science in Bangalore Govind Rangarajan, IIT Robar Director Rajeev Ahuja and others participated in this meeting.
0 Comments