ஜி20 அமைப்பின் கலாச்சார பணிக்குழு சார்பில் கலாச்சார பாதுகாப்பு குறித்த உலகளாவிய இணையதள கருத்தரங்கு நடைபெற்றது.
யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் கலாச்சாரம் சார்ந்த பொக்கிஷங்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கருத்தரங்கில், நீண்ட கால பிரச்சனையான சட்டவிரோத கடத்தல் மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை பாதுகாத்தல் குறித்து 28 நாடுகளைச் சேர்ந்த 40 நிபுணர்கள் ஒருங்கிணைந்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் 12 சர்வதேச அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.
மேலும் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதற்கு ஏதுவாக இடர்பாடு மேலாண்மை, அவசர கால நடவடிக்கை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் இணையதளம் வாயிலான வர்த்தகத்தில் உள்ள சவால்கள் குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதேபோல் இணையதள வர்த்தகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும் எனவும் இந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நான்கு உலகளாவிய இணைய தள கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. இந்த கருத்தரங்குகள் வரும், ஏப்ரல் 13,19 மற்றும் 20ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
ENGLISH
A Global Webinar on Cultural Preservation was organized by the G20 Working Group on Culture. Organized in collaboration with UNESCO, the seminar discussed the preservation of cultural treasures.
At the seminar, 40 experts from 28 countries jointly expressed their views on the long-standing problem of illegal trafficking and the protection of cultural treasures.
The views of representatives from 12 international organizations were also put forward in this constructive discussion.
It was also discussed the need to take risk management, emergency measures etc. to prevent illegal trafficking and the challenges in online business and the ways to deal with it.
Similarly, it was emphasized in this seminar that guidelines should also be developed for internet commerce.
Following this, four global webinars will be held. These seminars are scheduled to be held on April 13, 19 and 20.
0 Comments