2023 - 24 பருவத்திற்கான கச்சா சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Minimum Support Price (MSP) of raw jute for 2023-24 season /
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2023-24 பருவத்தில் சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) (முந்தைய TD-5 தரத்திற்கு சமமான TD-3) ஒரு குவிண்டாலுக்கு ரூ.5050/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய சராசரி எடை அளவிலான உற்பத்தி செலவை விட 63.20 சதவீதம் வருமானத்தை உறுதி செய்யும்.
2023-24 பருவத்திற்கான அறிவிக்கப்பட்ட கச்சா சணல் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 2018-19 நிதிநிலை அறிக்கையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அகில இந்திய சராசரி எடை அளவிலான உற்பத்திச் செலவை குறைந்தபட்சம் 1.5 மடங்கு என்ற அளவில் ஈடுகட்டும் வகையிலான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிக்கும் கொள்கைக்கு ஒத்துள்ளது.
இது குறைந்தபட்சம் 50 சதவீதத்தை லாப வரம்பாக உறுதி செய்கிறது. இது சணல் விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்வதற்கும் தரமான சணல் இழை தயாரிப்பை ஊக்குவிப்பதற்கும் முக்கியமான மற்றும் முற்போக்கான படிகளில் ஒன்றாகும்.
0 Comments