Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் 2023 / FIRST MEETING OF TAMILNADU CLIMATE CHANGE MANAGEMENT COMMITTEE 2023

TAMIL

  • தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் 2023 / FIRST MEETING OF TAMILNADU CLIMATE CHANGE MANAGEMENT COMMITTEE 2023: தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:
  • காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவும், தகவமைத்துக் கொள்ளவும் நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல திட்டங்களை தமிழக அரசு விரைவாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காலநிலை திட்டத்தை அறிவித்து, அதற்கு ரூ.500 கோடி ஒதுக்கி, நாட்டுக்கே முன்மாதிரியாக செயல்படுகிறோம்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் 'காலநிலை ஸ்டுடியோ' அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கென தனித்துவ மாதிரிகளை உருவாக்கவும், அதற்கான ரேடார்களை நிறுவவும் ரூ.10 கோடி ஒதுக்கி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
  • கடல் அரிப்பை தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனைமரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ராம்சர்அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்கள் எண்ணிக்கையை 13 ஆகஉயர்த்தியுள்ளோம். 
  • இத்திட்டங்களை ஒருங்கிணைக்க நாட்டிலேயே முதல்முறையாக 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' உருவாக்கப்பட்டுள்ளது. 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 
  • இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, என் தலைமையில் 'காலநிலை மாற்ற நிர்வாக குழு' அமைக்கப்பட்டுள்ளது.
  • வளர்ச்சி என்பது நீடித்து நிலைப்பதாக இருக்க வேண்டும். இனி தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும். 'ஒருங்கிணைந்த நலன்' என்ற கொள்கையை உறுதியாக எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்படுகிறது.
  • இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற சீற்றங்களை கையாள்வதுபோல, வெப்ப அலைகள், புதிய நோய்களை கையாளவும் நாம் தயாராக வேண்டும்.
  • ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை சில மாதங்களில் அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம். அதை இக்குழு ஆய்வு செய்து, இந்தியா கார்பன் சமநிலையை அடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 2070-ம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழகத்துக்கு இலக்கை நிர்ணயிக்கும்.
  • தமிழகத்தில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கான திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'காலநிலை அறிவு இயக்கம்' செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
  • இதில் அமைச்சர்கள், மாநிலதிட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சுற்றுச்சூழல் துறைசெயலர் சுப்ரியா சாஹு, மத்திய திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா, உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் எரிக் சோல்ஹைம், நிலையான கடலோர மேலாண்மை தேசிய மைய நிறுவன இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சுந்தரராஜன், ராம்கோ சமூக சேவைகள் தலைவர் நிர்மலா ராஜா, துறை செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். 

ENGLISH

  • The first meeting of the Tamil Nadu Climate Change Management Committee was chaired by Chief Minister Stalin at the Headquarters, Chennai. The Chief Minister said:
  • The Government of Tamil Nadu is rapidly implementing many schemes to guide the country in mitigating and adapting to climate change. Announcing the climate plan for Tamil Nadu and allocating Rs 500 crore for it, we are setting an example for the country.
  • A climate studio has been set up in Anna University and projects have been allocated Rs.10 crore to develop unique models for Tamil Nadu and install radars.
  • A palm tree planting program will be implemented to prevent sea erosion and maintain coastal biodiversity. We have increased the number of Ramsar certified wetlands in Tamil Nadu to 13.
  • For the first time in the country 'Tamil Nadu Green Climate Institute' has been created to coordinate these projects. The 'Re-Manjapai' movement has been launched.
  • To coordinate these activities, a 'Climate Change Steering Committee' has been set up under my chairmanship.
  • Growth must be sustainable. Henceforth, all projects implemented in Tamil Nadu should be implemented after examining them through the lens of climate change. This government is working on the principle of 'Integrated Welfare'.
  • The Indian Meteorological Department has announced that the country will experience severe heat waves in the coming months. We need to prepare for heat waves and new diseases just as we deal with storms and floods.
  • In a few months we are going to scientifically publish how much carbon each sector emits. The committee will study it and set a target for Tamil Nadu before 2070, the target set for India to achieve carbon balance.
  • A project to transform 10 villages in Tamil Nadu into resilient villages is being launched today. A 'climate awareness drive' is being implemented to create awareness about climate change among all sections of the society like school, college students and entrepreneurs. The notification will be out soon.
  • Ministers, State Planning Commission Deputy Chairman Jayaranjan, Environment Secretary Supriya Sahu, Central Planning Commission Former Deputy Chairman Montek Singh Ahluwalia, World Health Organization scientist Soumya Swaminathan, UN. Environment Project Executive Director Eric Solheim, National Center for Sustainable Coastal Management Institute Director Ramesh Ramachandran, 'Friends of the Earth' Sundararajan, Ramco Community Services Head Nirmala Raja, Department Secretaries and officials participated.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel