ஒரு வலுவான பேரிடர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் அனைத்து வகை பேரிடர்களின் எதிர்மறையான விளைவுகளை குறைத்து, உயிரிழப்பு, பொது சொத்துக்கள் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகளின் சேதம் ஆகிவற்றை தவிர்த்தல், அரசு உருவாக்கிய பொருளாதார மற்றும் வளர்ச்சி ஆதாயங்களை இழக்காது இருத்தல் என்பதே மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கையின் நோக்கமாகும்.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கை, பல்வகை பேரிடர்களுக்கான எச்சரிக்கை அமைப்பு, ஆபத்து, பேரிடர் பாதிப்புகளின் மதிப்பீடு மற்றும் அபாயம் குறித்த பகுப்பாய்வு, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்துத் துறைகளால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களில்,
பேரிடர் அபாயக் குறைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இணைந்து செயல்படுத்துதல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துகிறது.
மேலும், பேரிடர்களால் ஏற்படும் இறப்பு, பாதிப்பிற்குள்ளாபவர்களின் எண்ணிக்கை, நலிந்த பிரிவருக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அடிப்படை சேவைகளின் பாதிப்பு, பொருளாதார இழப்பு ஆகியவற்றை குறைப்பதற்கு இக்கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.
பேரிடர் அபாயக் குறைப்பிற்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் இந்தக் கொள்கை, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான உலகளாவிய மற்றும் தேசிய கட்டமைப்பின் அடிப்படையிலும், மாநிலத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறும் உருவாக்கப்பட்டுள்ளது.
ENGLISH
The aim of the improved Tamil Nadu State Disaster Management Policy is to reduce the negative effects of all types of disasters through a robust disaster management drive, avoid loss of life, damage to public property and critical infrastructure, and preserve the economic and developmental gains made by the state.
Tamil Nadu State Disaster Management Policy, Multi-Disaster Warning System, Risk, Disaster Impact Assessment and Risk Analysis, Mitigation Measures for Disaster Risk Reduction and Development Plans implemented by all departments,
Focuses on increasing priority and joint implementation of disaster risk reduction activities.
Also, the policy emphasizes on reducing disaster-related death, number of victims, impact on the vulnerable and damage to basic services, economic loss.
Providing clear guidance for disaster risk reduction, the policy has been developed based on global and national frameworks for disaster risk reduction and tailored to the state's vision and priorities.
0 Comments