தமிழ்நாடி சட்டப்பேரவையில் 2023 - 2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்
கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை ₹30,000 கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும்
உக்ரைன் போர், உலகளாவிய நிதி நெருக்கடிகள் காரணமாக வரும் ஆண்டில் நிதி ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
திருக்குறளை வாசித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி" என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும்.
இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி கடன் வழங்கப்படும்.
ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் மினி டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
பள்ளி வாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.
சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் முக்கிய இடங்களில் இலவச வைபை வசதி வழங்கப்படும்.
தகவல் தொழில்நுட்ப புரட்சியின் 2ம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் டி.என்.டெக் சிட்டி அமைக்கப்படும்.
2 ஆண்டில் ரூ.4,236 கோடி மதிப்புள்ள 4,491 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு.
தமிழகத்தில் 10,000 குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2000 கோடி நிதி.
தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில், எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ரூ.1000 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
போக்குவரத்து துறைக்கு ரூ.8,059 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.320 கோடி நிதி.
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19,465 கோடி நிதி.
சென்னையில் 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
2030ம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில் 2 லட்சம் முதலீடுகள் பெறப்பட்டு 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.
சேலத்தில் அமையும் ஜவுளி பூங்கா மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.
இந்தியாவில் உற்பத்தியான பசுமை மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை.
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கூடுதலாக 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
பத்திரப்பதிவு கட்டணம் 4 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.
பள்ளி கல்வித்துறைக்கு ரூ.40,229 கோடி ஒதுக்கீடு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு.
கோவையில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா, 2 கட்டங்களாக அமைக்கப்படும். முதல் கட்டத்தில் 45 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
பழனி, திருத்தணி, சமயபுரம் கோயில்களில் ரூ.485 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.7,149 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டப்படும்.
கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா, பொழுதுபோக்கு மையம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
ENGLISH
Minister PDR Palanivel Thiagarajan presented the financial statement for the year 2023-2024 in the Tamil Nadu Legislative Assembly.
We have brought down the revenue deficit to ₹ 30,000 crore by carrying out tough reforms in spite of severe financial crisis. It will be reduced further in the coming years
Due to the war in Ukraine and the global financial crisis, there are a lot of financial challenges to face in the coming year.
Finance Minister Palanivel Thiagarajan presented the budget after reading the tirukkural.
The Finance Minister presented the budget with the slogan "Kodayali scepter kudiompal fournum vodiyanam vendark koli".
The women's stipend scheme of Rs.1000 will be given from 15th September, Anna's birthday.
An allocation of Rs.7,000 crore has been made for this.
For Women Self Help Groups Rs. 30,000 crore loan.
Mini Tidal IT Park will be set up at Erode, Nellai, Chengalpattu.
A fund of Rs.10 crore will be allocated for the renovation of school gates and churches.
Free Wi-Fi facility will be provided in major cities including Chennai, Avadi, Thambaram, Coimbatore, Madurai, Trichy, Salem.
Chennai, Coimbatore, Hosur T.N. Tech City will be established as the 2nd phase of IT revolution.
Recovery of 4,491 acres of temple lands worth Rs.4,236 crore in 2 years.
Fund allocation of Rs.800 crore for renovation of 10,000 ponds and ponds in Tamil Nadu.
Rs.2000 crore fund for Chief Minister's Rural Roads Development Scheme.
Allocation of Rs.2000 Crores to set up Tamilnadu Weaving Project.
In Tamil Nadu, the development projects of Eshilmiku Coimbatore, Mamadurai will be implemented.
Prosperous Districts Scheme will be implemented in 50 districts.
The North Chennai Development Project will be implemented at a cost of Rs.1000 crore.
Fund allocation of Rs.8,059 crore for transport department.
Fund of Rs.320 crore to prevent flood in Chennai.
Rs.19,465 crore fund for highway department.
Allocation of Rs.500 crore to purchase 1000 new buses in Chennai.
Sports centers will be set up at a cost of Rs 20 crore in Kannagi Nagar, Nawalur, Perumbakkam, Attipattu area of Chennai.
15 new power projects with a capacity of 14,500 MW will be implemented by 2030.
Fund allocation of Rs.100 crore to hold International Investor Conference.
2 lakh investments have been received in Tamil Nadu and 221 MoUs have been signed.
2 lakh jobs will be created through textile park in Salem. 10 small handloom parks will be set up.
46 percent of the green electric vehicles produced in India are manufactured in Tamil Nadu.
An additional 1 lakh people will be given pension under the Social Security Pension Scheme this year.
Deed registration fee has been reduced from 4 percent to 2 percent.
Allocation of Rs.1,500 crore for students bus pass scheme.
Allocation of Rs.40,229 crore for school education.
Allocation of Rs.18,661 crore to the Department of Medicine and Public Welfare.
Semmozhi Park in Coimbatore will be constructed in 2 phases at a cost of Rs.172 crores. In the first phase, a botanical garden will be set up on 45 acres.
Works on Palani, Tiruthani and Samayapuram temples will be carried out at a cost of Rs.485 crore.
Allocation of Rs 7,149 crore for the implementation of the Okanagan Second Integrated Drinking Water Project.
A flyover will be constructed from Chennai Thenampet to Saidapet.
Metro rail project in Coimbatore will be implemented at an estimated cost of Rs.9000 crore. Metro rail project will be implemented in Madurai at a cost of Rs.8500 crore.
Cleaning project for 44 km of Adyar river, park on banks, recreation center will be set up with private participation.
0 Comments