தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022 (Tamil Nadu Aerospace and Defence Industrial Policy), தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022 (Tamil Nadu Life Sciences Promotion Policy), தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 (Tamil Nadu Footwear and Leather Products Policy), தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023 (Tamil Nadu Electric Vehicle Policy) ஆகிய கொள்கைகள் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் கீழ்க்கண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எத்தனால் கொள்கையின் நோக்கம் 2023
தமிழ்நாட்டை பசுமை பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்துதல் இக்கொள்கையின் நோக்கமாகும்.
கொள்கையின் அவசியம் எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் வாகனங்கள் வெளியேற்றும் புகை உமிழ்வு வெகுவாக குறையும் என்பதால் சுற்றுப்புற மாசுபாட்டின் நிலை பெருமளவு குறைந்து, மக்களின் சுகாதாரம் பேணப்படும் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்படும்.
இந்த முயற்சி, ஐக்கிய நாடுகள் சபையின் COP 26 -ல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய புகை உமிழ்வு இலக்கை அடைவோம் என்று இந்தியா அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தமிழ்நாட்டின் முக்கிய பங்களிப்பாக இக்கொள்கை அமையும்.
எத்தனால் கலந்த பெட்ரோலை ஊக்குவிப்பதற்கான காரணிகள்
உபரி பருவத்தில், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி எற்பட்டு இதனால் சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
எனவே, விவசாயிகளுக்கு தரப்படவேண்டிய விளைபொருள் கொள்முதலுக்கான நிலுவைத் தொகை தாமதமின்றி, வழங்கிட இயலும், கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களை பயிரிடும் விவசாயிகளின் வருமானம் பெருமளவு அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
வடிப்பாலை கரையக்கூடிய ஈரதானிய பொருட்கள் (DWGS) மற்றும் வடிப்பாலை கரையக்கூடிய உலர் தானிய பொருட்கள் (DDGS) ஆகியன கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும். எரிபொருள் இறக்குமதியில் வெளிநாடுகளை சார்ந்து இருத்தல் குறையும் என்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
0 Comments