தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023 / TAMILNADU FRIGHT TRANSPORT POLICY & INTEGRATED FREIGHT TRANSPORT PLAN 2023
மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நம்பகமான, சிக்கனமான, நிலையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு போக்குவரத்துச் சூழல் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போட்டித்திறனை ஊக்குவிக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
முக்கிய கருப்பொருட்கள் (Themes)
ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வலுவான போக்குவரத்து உட்கட்டமைப்பினை உருவாக்குதல், குறைந்த செலவிலான மற்றும் உயர்ந்த தரத்திலான சேவைகள் கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல், ஒற்றைச்சாளர அனுமதி வழங்கும் அமைப்பை உருவாக்குதல்,
சரக்கு போக்குவரத்து சூழல்அமைப்பின் மீள்திறன் மற்றும் நிலைப்புத்தன்மையை உறுதி செய்தல் (Resilience & Sustainability), புதிய தொழில்நுட்ப உத்திகளைச் செயல்படுத்தல் (New Technology), சரக்கு போக்குவரத்துத் துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் (Skill Development) ஆகியவை இக்கொள்கையின் முக்கிய கருப்பொருட்கள் ஆகும்.
இக்கொள்கையின் மூலம் சரக்கு போக்குவரத்து துறைக்கு, "தொழில் அந்தஸ்து (Industrial Status) வழங்குதல், "ஒற்றை சாளர அனுமதி" (Single Window Clearances) வழங்குதல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சரக்கு போக்குவரத்து துறையில் புதிய தொழில் நுட்ப உத்திகளை செயற்படுத்துதல், திறன் மேம்படுத்துதல், நிலைப்பு தன்மையை (Sustainability) உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கப்படும்.
"சரக்கு போக்குவரத்து செயல் திட்டம்" (Logistics Plan) மூலம் மூன்று பெருவழி தடங்களில் மட்டுமே, 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.63,000 கோடி அளவிற்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.
0 Comments