இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செயற்கைக்கோள்களை வடிவமைக்கிறது.
அவை, பி.எஸ்.எல்.வி., - - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. பாராட்டுஇதுதவிர இஸ்ரோ, வருவாய் ஈட்டும் நோக்குடன், வணிக ரீதியாக வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்துகிறது.
அதன்படி, இஸ்ரோவின் வணிகப் பிரிவான, 'நியூ ஸ்பேஸ் இந்தியா' உடன், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனம், 72 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தப்படி, 2022 அக்., 23ல், 36 செயற்கைக் கோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டன.
மீதமுள்ள, 36 செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 'எல்.வி.எம்.3 -- எம் 3' ராக்கெட், நேற்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 வகையை சேர்ந்தது; 643 டன் எடை; 43.5 மீட்டர் உயரம் கொண்டது. இதுவே அதிக எடை உடைய ராக்கெட்.
பூமியில் இருந்து புறப்பட்ட 19வது நிமிடத்தில் இருந்து, ராக்கெட் திட்டமிடப்பட்ட, 455.53 கி.மீ.,ரில் உடைய புவி வட்ட பாதையில் தகவல் தொடர்புக்கான, 36 செயற்கைக் கோள்களையும், ஒரு சமயத்தில் நான்கு என்ற வீதத்தில், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.
0 Comments