வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு / The centenary of the Vaikam struggle will be celebrated by the Tamil Nadu government for one year - CM Stalin's announcement
கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் பிற சாதியினர் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலமாக இருந்து வந்தது.
இந்நிலையில், இப்பிரச்சனைக்காக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.
இந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதில் பெரியார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று (மார்ச் 30) கொண்டாடப்படுகிறது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
0 Comments