Recent Post

6/recent/ticker-posts

கொல்கத்தா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம் / D.S.Sivagnanam appointed as Chief Justice of Calcutta High Court

  • கடந்த 1963ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற பின்னர் 1986ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 
  • 2000ம் ஆண்டில் மத்திய அரசின் வழக்கறிஞராக இருந்த டி.எஸ். சிவஞானம் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.எஸ். சிவஞானம் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 
  • இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், அதே உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ். சிவஞானத்தை அடுத்த பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
  • இந்நிலையில் நீதிபதி டி.எஸ். சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel