பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு / The first international conference of the Shanghai Cooperation Organization on Traditional Medicine
பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் குவஹாத்தியில் தொடங்கி வைத்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் தொடர்பான ஒழுங்கு முறை செயல்திட்டத்தை வகுப்பது, உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குவோர் மத்தியிலான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது, பாரம்பரிய மருந்துகளை ஊக்குவிப்பதில் அரசு அமைப்புகளின் பங்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள பாராம்பரிய மருத்துவப் பொருட்கள் கண்காட்சியும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதி செய்வோர் ஆகியோர் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
ENGLISH
Union Minister of State for Ayush, Mr. Sarbananda Sono, inaugurated the first International Conference and Exhibition of the Shanghai Cooperation Organization on Traditional Medicine.
More than 150 representatives from 17 countries of the Shanghai Cooperation Organization participated in the seminar. The 2 -day seminar consults on the role of government agencies in promoting traditional medical products, promoting discussions among manufacturers and buyers, and promoting traditional medicines.
The four -day traditional medical exhibition was also inaugurated today. This includes companies, exporters and importers who produce traditional drugs.
0 Comments