Recent Post

6/recent/ticker-posts

'எம்-சாண்ட்' உற்பத்திக்கு அரசு கொள்கை / M-SAND TAMILNADU POLICY

TAMIL

  • கட்டுமானப் பணிகளில், ஆற்று மணலுக்கு மாற்றாக, சமீப காலமாக எம் - சாண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது. தரமற்ற எம் - சாண்ட் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, அதன் தயாரிப்பு, தரம், விலை போன்றவற்றை வரைமுறைப்படுத்த, புதிய கொள்கையை, தமிழக அரசு வௌயிட்டது.
  • சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் கிருஷ்ணன், புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனர் ஜெயகாந்தன் பங்கேற்றனர். இக்கொள்கை, நேற்றில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
  • அரசு கட்டுமான நடவடிக்கை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, ஆற்று மணலுக்கு மாற்றாக, எம் - சாண்ட் அல்லது அரவை மணல் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 
  • குவாரிகளில் பயன்பாட்டிற்கு உதவாத கற்களில் இருந்தும், சிறிய அளவிலான கிரானைட் கற்களில் இருந்தும், எம் - சாண்ட் அல்லது அரவை மணல் தயாரிக்கப்படுகிறது. 
  • இதனால், குவாரிகளில் ஏற்படும் கழிவுகளின் அளவு குறைக்கப்படுகிறது. மாநிலத்தில் குவாரி கழிவுகளே இல்லாத நிலையை உருவாக்குவதே, எம் - சாண்ட் கொள்கையின் குறிக்கோள். 
  • ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது, பொது மக்களுக்கு செலவு குறைந்த, தரமான கட்டுமானப் பொருள் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்

  • குவாரி குத்தகை உரிமத்துடன், எம் - சாண்ட் தயாரிப்பு ஆலைகள் வைத்துள்ளவர்கள், குவாரி குத்தகை உரிமம் இன்றி எம் - சாண்ட் ஆலை மட்டும் நடத்துபவர்கள் என, இத்துறை இரண்டு பிரிவாக உள்ளது.
  • எம் - சாண்ட், அரவை மணல் ஆலைகளை பதிவு செய்ய, புவியியல் மற்றும் சுரங்க துறையில் ஒற்றை சாளர முறை வசதி ஏற்படுத்தப்படும். 
  • இதில், எம் - சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தனியாக குவாரி உரிமம் வழங்கப்பட மாட்டாது.
  • எம் - சாண்ட் ஆலை ஒப்புதலுக்கான நடைமுறையை எளிமைபடுத்துதல்; கல் குவாரிகளை மட்டுமே நம்பி இருக்கும் ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வகை செய்தல் போன்ற விபரங்கள், புதிய கொள்கையில் இடம் பெற்றுள்ளன. 
  • எம் - சாண்ட் குவாரி பணியாளர்கள், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அதற்கான பயன்களை பெற ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ENGLISH

  • M-sand has been increasingly used in construction as an alternative to river sand in recent times. To prevent the sale of substandard M-Sand, the Tamil Nadu government has announced a new policy to regulate its production, quality, price etc.
  • Minister Duraimurugan received the announcement from Chief Minister Stalin at the Chennai Secretariat. Chief Secretary Thivanpu, Industries Secretary Krishnan, Geology and Mines Commissioner Jayakanthan participated. This policy has come into force since yesterday.
  • The government has decided to increase the production of M-sand or Aravai sand as an alternative to river sand for construction activities and infrastructure development.
  • M-sand or crushed sand is prepared from unquarried stones and small granites.
  • Thus, the amount of waste generated in the quarries is reduced. The objective of the M-Sand policy is to create a state where there is no quarry waste.
  • A cost-effective, quality construction material is available to the general public as compared to river sand.

Highlights

  • The sector is divided into two categories, those having M-Sand manufacturing plants with quarry lease license and those operating only M-Sand plant without quarry lease license.
  • A single window system facility will be established in Geology and Mining Department to register M-Sand, Aravai Sand Mills.
  • In this case, M-Sand production companies will not be given separate mining license.
  • Simplification of procedure for approval of M-Sand plant; Details such as classification of raw materials required by factories that rely solely on stone quarries are included in the new policy.
  • It has been said that M-Sand quarry workers will be included as members of the Construction Workers Welfare Board and will be provided with the same benefits.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel