பூமி ஆதார் எனப்படும் தனித்துவ நில அடையாள எண்ணை அறிமுகப்படுத்துவதற்கான, 4-வது பூமி சம்வாத் எனப்படும் இந்திய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புவிசார் குறிப்பு பற்றிய தேசிய மாநாட்டை வரும் 17-ந் தேதி, மத்திய நில சீர்திருத்தத்துறை புதுதில்லியில் நடத்துகிறது.
மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார். மத்திய ஊரக மேம்பாடு மற்றும் உருக்குத்துறை இணையமைச்சர் திரு ஃபக்கான் சிங் குலாஸ்தே, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய பஞ்சாயத்துராஜ் துறை இணையமைச்சர் திரு கபில் மோரேஸ்வர் பாட்டீல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.
நில ஆவணங்கள் தரவு ஜனநாயகமாக்கல் மற்றும் மாத்ரிபூமி, எளிதாக வர்த்தகம் புரிதல் மற்றும் எளிதான வாழ்க்கை மேற்கொள்வதற்கு பூமி ஆதாரைப் பயன்படுத்துதல், நில அளவை, மறு அளவை, பூமி ஆதார் பயன்பாடு போன்றவற்றில் தேசிய மற்றும் உலக அளவிலான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய தலைப்புகளில் 3 அமர்வுகள் மாநாட்டில் நடைபெறும்.
ENGLISH
The Central Department of Land Reforms will hold the 4th Bhumi Samwad National Conference on Digitization and Georeferencing of India in New Delhi on 17th to introduce unique land identification number called Bhumi Aadhaar. Union Minister for Rural Development and Panchayat Raj Mr. Giriraj Singh will be the Chief Guest.
Union Minister of State for Rural Development and Steel, Mr. Fakhan Singh Kulaste, Union Minister of State for Consumer Affairs, Food, Public Distribution and Rural Development, Sadhvi Niranjan Jyoti, Union Minister of State for Panchayat Raj Department, Mr. Kapil Moreswar Patil are also participating in this.
The conference will have 3 sessions on the topics of democratization of land documents data and Madribhoomi, ease of business understanding and use of Bhoomi Aadhaar for easy living, adoption of national and global best practices in land surveying, re-surveying, use of Bhoomi Aadhaar etc.
0 Comments