Recent Post

6/recent/ticker-posts

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம் / Online Gambling Prohibition Bill re-passed

  • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
  • இதையடுத்து, கடந்த மார்ச் 9-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.
  • அதன்படி, பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டமசோதாவை தாக்கல் செய்து, அதை மறு ஆய்வு செய்யுமாறு கோரினார். 
  • இறுதியாக, முதல்வர் ஸ்டாலின் சட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கோரினார். குரல் வாக்கெடுப்பு மூலம், ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel