பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில், தமிழக சுற்றுலாத் துறை அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழக சுற்றுலா சிறப்புகள், வீடியோ மற்றும் குறும்படங்கள் வாயிலாக விளக்கப்படுகின்றன.
ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நுாலையும், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டார்.
இங்கு, பசிபிக் பகுதி பயண எழுத்தாளர் சங்க விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான, 'பட்வா' சர்வதேச பயண விருது, தமிழக சுற்றுலாத் துறைக்கும்; இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான, 'பட்வா' விருது, அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில், சுற்றுலாத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
ENGLISH
At the Berlin International Tourism Fair, the Tamil Nadu Tourism Department Hall is set up and Tamil Nadu tourism specialties are explained through videos and short films.
Tourism Minister Ramachandran also released a booklet containing photographs with explanations in German.
Here, the Pacific Region Travel Writers Association awards ceremony took place. In this, 'Patwa' International Travel Award for Traditional Tourism Destination, to Tamil Nadu Tourism Department; Minister Ramachandran was also given the 'Padwa' award for the best tourism minister in India.
Tourism Principal Secretary Chandramohan, Tamil Nadu Tourism Director Sandeep Nandhari participated in the ceremony.
0 Comments