Recent Post

6/recent/ticker-posts

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) ஆயுத இறக்குமதி & ஏற்றுமதி குறித்த சமீபத்திய அறிக்கை 2023 / Stockholm International Peace Research Institute (SIPRI) Latest Report on Arms Imports & Exports 2023

TAMIL

  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கையின்படி, 2013-17 மற்றும் 2018-22 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத சப்ளையர் ரஷ்யா என்பதைக் காட்டுகிறது. 
  • ஆனால் இந்தியாவுக்கான ஆயுத இறக்குமதியில் அதன் பங்கு 64 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் இரண்டாவது பெரிய ஆயுத சப்ளையராக உருவெடுத்துள்ளது. 
  • 2018-22 க்கு இடையில் இந்தியாவிற்கு 29 சதவிகிதம் ஆயுதம் பிரான்ஸிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, அமெரிக்காவிலிருந்து 11 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவின் காரணமாக ஆயுத இறக்குமதிக்கான தேவையை அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
  • மேலும், மொத்த உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 11 சதவீத பங்கைக் கொண்டு, இந்தியா 2018 ஆண்டிலிருந்து உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இருப்பினும், ஆயுத இறக்குமதியில் 11 சதவீத வீழ்ச்சிக்கு இந்தியாவின் ஆயுதக் கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் ஆயுத இறக்குமதியாளர்களை வகைப்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
  • ரஷ்யா மற்றும் பிரான்ஸ் தவிர, உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் இஸ்ரேல், தென் கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்தும் இந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியா ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. 
  • மற்ற இறக்குமதியாளரின் வலுவான போட்டி, இந்திய ஆயுத உற்பத்தி அதிகரிப்பு மற்றும் 2022 முதல் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆகியவை இந்தியாவின் முக்கிய ஆயுத இறக்குமதியாளரான ரஷ்யாவை நெருக்கடியான சூழலில் தள்ளியுள்ளது.
  • 2018-22ல் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியா (31%), சீனா (23%) மற்றும் எகிப்துக்கு (9.3%) சென்றது. இரண்டு காலகட்டங்களுக்கு இடையே ரஷ்ய ஆயுத ஏற்றுமதி 37 சதவீதம் குறைந்தாலும், சீனா மற்றும் எகிப்துக்கான ஏற்றுமதி முறையே 39 சதவீதம் மற்றும் 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
  • பிரான்சில் இருந்து இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 62 போர் விமானங்கள் மற்றும் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 
  • இது, 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் 489 சதவீதம் அதிகம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 
  • ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மியான்மருக்கு மூன்றாவது பெரிய ஆயுத சப்ளையராக இருந்து வருகிறது, அதன் இறக்குமதியில் 14 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. 
  • ஆயுத இறக்குமதியில் இந்தியாவைத் தொடர்ந்து சவுதி அரேபியா (9.6%), கத்தார் (6.4%), ஆஸ்திரேலியா (4.7%), சீனா (4.6%), எகிப்து (4.5%), தென் கொரியா (3.7%), பாகிஸ்தான் (3.7%) ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. 
  • இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் சுமார் 77% சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியுள்ளது இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 

ENGLISH

  • According to a recent report by the Stockholm International Peace Research Institute (SIPRI), Russia was India's largest arms supplier between 2013-17 and 2018-22. But its share in arms imports to India has declined from 64 percent to 45 percent. At the same time France has emerged as the second largest arms supplier.
  • Between 2018-22, 29 per cent of India's arms imports came from France, compared to 11 per cent from the US, it said. The report pointed out that India's relationship with Pakistan and China has increased the demand for arms imports.
  • Also, India has been the world's largest arms importer since 2018, accounting for 11 percent of total global arms imports. However, the 11 percent drop in arms imports can be attributed to several factors, including India's arms procurement process and efforts to declassify its arms importers.
  • Apart from Russia and France, India has also imported arms from Israel, South Korea and South Africa, the world's top arms exporters, during this five-year period.
  • Strong competition from other importers, increasing Indian arms production and an invasion of Ukraine from 2022 have put India's main arms importer, Russia, in a critical situation.
  • Two-thirds of Russia's arms exports in 2018-22 went to India (31%), followed by China (23%) and Egypt (9.3%). While Russian arms exports fell by 37 percent between the two periods, exports to China and Egypt increased by 39 percent and 44 percent, respectively.
  • India's arms imports from France include 62 warplanes and four submarines. This is a 489 percent increase between 2013-17 and 2018-22, the report said. As a result, France has taken the second place behind the United States. India has been Myanmar's third largest arms supplier after Russia and China, accounting for 14 percent of its imports.
  • India is followed by Saudi Arabia (9.6%), Qatar (6.4%), Australia (4.7%), China (4.6%), Egypt (4.5%), South Korea (3.7%), and Pakistan (3.7%). There are The report revealed that Pakistan, which is ranked 8th in the list, has bought about 77% of its arms from China.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel