ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் போக்குவரத்துத் துறை அமைச்சர்களின் 10-வது கூட்டத்திற்கு திரு நிதின் கட்கரி தலைமை தாங்கினார் / Mr. Nitin Gadkari chaired the 10th meeting of Transport Ministers of Shanghai Cooperation Organization
புதுதில்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் போக்குவரத்துத் துறை அமைச்சர்களின் 10-வது கூட்டத்திற்கு திரு நிதின் கட்கரி தலைமை தாங்கினார்.
இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சிறந்த திறன்மிக்க, நீடித்த தன்மையை அடைவதற்காக போக்குவரத்தில் கரியமிலவாயு உமிழ்வை குறைத்தல், மின்னணு மாற்றம் மற்றும் புதுமை தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.
போக்குவரத்துத் துறையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளுக்கிடையே இணைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
0 Comments