Recent Post

6/recent/ticker-posts

2023 ஆம் ஆண்டு ஐ.நா. உலக மக்கள் தொகை அறிக்கை / 2023 YEAR UN REPORT ON WORLD POPULATION

TAMIL

  • ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் சார்பில், 1950 முதல் உலக மக்கள்தொகை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, அந்த ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை, 86.1 கோடியாக இருந்தது. 
  • சீனா, 114.4 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது.கடந்த, 73 ஆண்டுகளாக, இந்தப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன.
  • இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட, இந்த அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, 142.86 கோடி மக்கள் தொகையுடன், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனா, 142.57 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட, 2023ம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையில், இந்தியா குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன.
  • அதன்படி, இந்திய மக்கள்தொகையில், 0 - 14 வயதுடையோர் எண்ணிக்கை, 25 சதவீதமாகும். 10 - 19 வயதுடையோர், 18 சதவீதம்; 10 - 24 வயதுடையோர், 26 சதவீதம்; 15 - 64 வயதுடையோர், 68 சதவீதமாகும்.
  • 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை, 7 சதவீதமாகும். கேரளா மற்றும் பஞ்சாபில் அதிக வயதானவர்களும், பீஹார், உத்தர பிரதேசத்தில் இளம் வயதினரும் அதிகளவில் உள்ளனர். 
  • வரும், 2050ல் இந்தியாவின் மக்கள்தொகை, 166.8 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை, 131.7 கோடியாகவும் இருக்கும் என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ENGLISH

  • World population data has been collected since 1950 by the United Nations Population Fund. According to this, the population of India in that year was 86.1 crore. China was at the top with 114.4 crore. 
  • For the last 73 years, China has been at the top of this list and India at the second place. According to the statistics released yesterday, India has taken the first place with a population of 142.86 crore. 
  • China is in the second place with 142.57 crore. The World Population Report for the year 2023, recently published by the United Nations Population Fund, has published information about India. 
  • According to it, the number of 0-14 year olds in India's population is 25 percent. 10 - 19 year olds, 18 percent; 10 - 24 year olds, 26 percent; 15-64 age group is 68 percent.
  • The number of people above the age of 65 is 7 percent. Kerala and Punjab have the highest number of elderly people, while Bihar and Uttar Pradesh have the highest number of young people. According to the report, India's population will be 166.8 crores and China's population will be 131.7 crores in 2050. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel