எட்டு முக்கிய தொழில் துறைகளில் குறியீட்டு எண் மார்ச் 2022ஐ ஒப்பிடுகையில், மார்ச் 2023-ல் 3.6 சதவீதமாக (தற்காலிகமானது) அதிகரித்தது.
நிலக்கரி, உரம், எஃகு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட, மார்ச் 2023-ல் அதிகரித்தது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்புப் பொருட்கள், உரம், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு தொழில் துறைகள் தொழில் உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
நிலக்கரி உற்பத்தி 12.2 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.8 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 1.5 சதவீதமும், உரங்களின் உற்பத்தி 9.7 சதவீதமும், எஃகு உற்பத்தி 8.8 சதவீதமும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி 2.8 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 0.8 சதவீதமும், மின்சார உற்பத்தி 1.8 சதவீதமும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட, 2023 மார்ச் மாதத்தில் உற்பத்தி குறைந்தது
0 Comments