முன்னதாக, நிலையான வளர்ச்சி (Sustainable development Goals) மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்த இந்திய அரசின் பலமுனை கணக்கெடுப்பு குறியீடு (Multiple Indicator Survey (MIS)) கணக்கெடுப்பை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) மேற்கொண்டது.
MIS கணக்கெடுப்பின் இந்த 78வது சுற்று, முதலில் 2020 ஜனவரி-டிசம்பர் காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக களப்பணி 2021 ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதிலும் இருந்து 11 லட்சத்துக்கும் அதிகமானோரிடமிருந்து (11,63,416) தகவல்கள் பெறப்பட்டன.
குடும்பங்களின் செலவீனங்கள், வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம், வீடுகளில் எரிபொருள் பயன்பாடு, மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதி, 31.03.2014க்குப் பிந்தைய தேதியில் கட்டப்பட்ட வீடுகள், 15 - 24 வயது இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார நிலை குறித்த தகவல்கள் பெறப்பட்டன.
அதன்படி, அகில் இந்திய அளவில் 3ல் ஒரு இளைஞர் (15 - 24 வயது) எந்தவித கல்வியையும். வேலைவாய்ப்பையும், தொழிற்பயிற்சியையும் கொண்டிருக்க வில்லை (Percentage of persons of age 15-24 years not in education, employment or training (NEET) as on date of survey) என்று இந்திய அரசின் பலமுனை கணக்கெடுப்பு குறியீடு தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் இந்த NEET பிரிவு இளைஞர்களின் விகிதம் 30.2% ஆகவும், நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 27.0, அகில இந்திய அளவில் 29.3% ஆகவும் உள்ளன.
பால் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள்: குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூகத்தில் நிலவும் பால்ரீதியான கற்பொழுக்கம் காரணமாக பெண்களிடையேயான தொழிலாளர் நகர்வு (Labour Mobility) ஒப்பீட்டு அளவில் குறைவாகக் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சமீபத்திய ஆய்வும் இதனை உறுதி செய்துள்ளது.
அதில் இந்திய அளவில் எந்தவித கல்வியையும், வேலைவாய்ப்பையும், தொழிற்பயிற்சியையும் கொண்டிராத (NEET) பெண்களின் எண்ணிக்கை 51.7 % ஆகவும், ஆண்களின் எண்ணிக்கை 15.4% ஆகவும் உள்ளது.
மேலும், இந்த NEET பிரிவில் உள்ள பெண்களில் 90% பேர் குடும்ப வேலைகளில் தங்களை ஈடுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம், ஆண்களில் வெறும் 7.5% பேர் மட்டுமே, குடும்பப் பொறுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாக தெரிவித்து வருகின்றனர்.
மாநிலங்கள் வாரியாக உத்தரபிரதேசத்தில், மிகவும் குறைவாக பெண்களிடையேயான தொழிலாளர் நகர்வு காணப்படுவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் 3ல் 2 (அதாவது 60%) பெண்கள் எந்தவிதமான கல்வியையம், வேலைவாய்ப்பையும், தொழிற்பயிற்சியையும்.
அடுத்த இடமாக மேற்கு வங்க மாநிலத்தில் கிட்டத்தட்ட 58.6% பெண்கள் எந்தவித தொழிலாளர் நகர்வையும் கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் 2ல் 1 பெண் (அதாவது 49.8%) எந்தவித தொழிலாளர் நகர்வையும் கொண்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
Earlier, the National Sample Survey Office (NSSO) conducted the Multiple Indicator Survey (MIS) of the Government of India on the Sustainable Development Goals and the socio-economic status of migrant workers.
This 78th round of MIS survey was originally scheduled to be conducted during January-December 2020. However, the field work was extended till August 2021 due to the Covid-19 pandemic. The survey collected data from over 11 lakh (11,63,416) people across the country.
Information on various socio-economic status including household expenditure, piped water supply to houses, fuel consumption in houses, improved toilet facilities, houses built after 31.03.2014, education, employment and vocational training of 15 - 24 year old youth was obtained.
Accordingly, 1 in 3 youth (ages 15-24) across India have no education of any kind. Percentage of persons of age 15-24 years not in education, employment or training (NEET) as on date of survey) has been reported by the Indian government's multi-dimensional survey index. The proportion of youth in this NEET category is 30.2% in rural areas, 27.0% in urban areas and 29.3% in all India.
Gender-based ups and downs: Various studies suggest that labor mobility among women is relatively low due to family responsibilities and gender-based culture prevailing in the society. This recent study has also confirmed this.
In India, the number of women who have no education, employment or training (NEET) is 51.7% and the number of men is 15.4%. Also, 90% of girls in this NEET category reported that they engaged in family work. At the same time, only 7.5% of men report that they involve themselves in family responsibilities.
State-wise, Uttar Pradesh has the least labor mobility among women, the study said. 2 out of 3 (i.e. 60%) women in the state have no education, employment or vocational training. Next, in the state of West Bengal nearly 58.6% of women have no labor mobility. According to the study, 1 in 2 women in Tamil Nadu (ie 49.8%) have no labor mobility.
0 Comments