உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் ராணுவ பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதில், ஏற்கனவே 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த அமைப்பில் இணைய ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகியவை விருப்பம் தெரிவித்திருந்தன.
இதற்கு ஏற்கனவே உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், இதற்கான ஒப்புதலை அளிக்க துருக்கி, ஹங்கேரி ஆகிய நாடுகள் தாமதம் செய்தன.
இந்நிலையில், அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்த நிலையில், 31-வது நாடாக ஃபின்லாந்து இன்று இணைய உள்ளது. இது வரலாற்றுப்பூர்வமான வாரம் என்று நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்ட்டென்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments