இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், டிஆர்டிஓ மற்றும் இந்திய விமானப்படை இணைந்து மறுபயன்பாட்டு ராக்கெட் லேண்டிங் மிஷன் (ஆர்எல்வி லெக்ஸ்) தரையிறக்கும் சோதனையை கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் சோதனை வட்டத்தில் மேற்கொண்டது.
இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டரின் உதவியுடன் நேற்று காலை 7.10 மணிக்கு மறுபயன்பாட்டு ராக்கெட் வாகனம் புறப்பட்டது. அது கடல்மட்டத்தில் இருந்து 4.5 கிமீ உயரத்தில் பறந்த போது நடுவானில் விடுவிக்கப்பட்டது.
பின்னர் ராக்கெட்டை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு கணினி மையத்தில் இருந்து வழிநடத்தி தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது. செலுத்தப்பட்ட ஓடுபாதையிலேயே மீண்டும் ராக்கெட் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
ஏற்கனவே 2016ம் ஆண்டு சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஹைபர் சோனிக் விமான சோதனை முதன் முதலாக நடத்தப்பட்டது.
இதன் அடுத்தகட்ட சோதனையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டு அதன் சோதனையும் வெற்றிகரமாக இஸ்ரோ நடத்திமுடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments