துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் மற்றும் சென்னை ஐஐடி - கண்டுபிடிப்பு வளாகத்தை சென்னையில் திரு சர்பானந்த சோனாவால் திறந்துவைக்கிறார் / National Technology Center for Ports, Waterways and Coasts and IIT Chennai - Inauguration of Innovation Campus in Chennai by Mr. Sarbananda Sona
துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் மற்றும் சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு வளாகத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் 2023, ஏப்ரல் 24 அன்று சென்னையில் திறந்து வைப்பார்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்த மையம் சென்னை ஐஐடியில் ரூ. 77 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாக செயல்படும் இந்த நிறுவனம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கான தீர்வுகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குகிறது.
அனைத்துத் துறைகளிலும் துறைமுகம், கடலோர, நீர்வழிப்பாதைகள் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் தன்மையில் 2டி மற்றும் 3டி ஆய்வுகளை மேற்கொள்ள உலகத் தரத்திலான திறன்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா முன்முயற்சிகளை மேற்குறிப்பிட்ட துறைகளில் இந்நிறுவனம் மேம்படுத்துகிறது.
0 Comments