தாதர் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களுக்கு சென்ற, பிரதமர் மோடி, அங்கு, சில்வாசா நகரில், 203 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார். அவரை, பிரதமர் மோடியை, மொபைல் போன் மின்விளக்குகளால், அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.
இம்மருத்துவமனையில் 24 மணிநேர நுாலம், சிறப்பு மருத்துவ பணியாளர்கள், மருத்துவ ஆய்வகங்கள், ஸ்மார்ட் விரிவுரை அரங்குககள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், உடற்கூறியல் அருங்காட்சியகம், ஒரு கிளப்ஹவுஸ், கிளப் ஹவுஸ், ஆசிரிய விடுதிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வெளிப்புற மற்றும் உள் விளையாட்டுகள் தவிர மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன.
மேலும், 4,850 கோடி ரூபாய் மதிப்பிலான, 96 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 165 கோடி ரூபாய் செலவில் தேவ்கா பகுதியில் கட்டப்பட்ட 5.4 கி.மீ., கடல்முனையையும் திறந்து வைத்தார். இங்கு, ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகள், தோட்டங்கள், ஓட்டல்கள் உட்பட, பல வசதிகள் உள்ளன.
0 Comments