Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகள் - தமிழக அரசு வெளியீடு / New Rules for Tamil Nadu Urban Local Bodies - Tamil Nadu Govt Issue

  • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  • அந்த புதிய விதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்ய வேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, 80 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள மாநகராட்சியில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 முதல் 80 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகராட்சிகளில் 52 கவுன்சிலர்களும், 30 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள நகராட்சிகளில் 22 கவுன்சர்களும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், 25 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்களும், பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel