Recent Post

6/recent/ticker-posts

எல்.ஐ.சி., புதிய தலைவர் சித்தார்த்த மொஹந்தி / Siddhartha Mohanty is the new chairman of LIC

  • மத்திய அரசின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான தலைவர்கள் நியமனத்திற்கான தேடுதலில், எப்.எஸ்.ஐ.பி., எனப்படும் 'நிதிச் சேவைகள் நிறுவனப் பணிகள் அமைப்பு' கடந்த மாதம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. 
  • இதைத் தொடர்ந்து எல்.ஐ.சி., எனப்படும் 'லைப் இன்சூரன்ஸ் கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியா'வின் தலைவராக, சித்தார்த்த மொஹந்தி பரிந்துரைக்கப்பட்டார். 
  • இதையடுத்து, மொஹந்தியை மத்திய அரசு எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய தலைவராக நியமித்து நேற்று அறிவித்தது. இப்பதவியில், மொஹந்தி தன் 62 வயது வரை அல்லது 2025 ஜூன் 7ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். 
  • தற்போது மொஹந்தி எல்.ஐ.சி.,யின் நிர்வாக இயக்குனராக உள்ளார். மேலும் எம்.ஆர்.குமார், கடந்த மார்ச் 13ம் தேதியுடன் தலைவர் பதவியை நிறைவு செய்ததை அடுத்து, தலைவர் பொறுப்பையும் சேர்த்து பார்த்துவந்தார். 
  • எல்.ஐ.சி.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர் பி.சி.பட்னாயக், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel