டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு நவ.19 ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது.
92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வுக்கு சுமார் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்த நிலையில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியானது. இதை அடுத்து மீதமுள்ள 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவை பார்ப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி-யின் https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதன் முகப்புப் பக்கத்தில் TNPSC குரூப் 1 முடிவை பார்ப்பதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு திரையில் தோன்றும் படிவத்தில் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
சரியான தகவலை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால் தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
இந்த முடிவை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புகளுக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.
0 Comments