அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக, விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
கடந்த மார்ச் ௨ம் தேதி மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த சுல்தான் அல் நெயாடி உட்பட, ஆறு வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.
விண்வெளியில் தன் இரண்டு மாத பயணத்தை முடிக்க உள்ள நிலையில், சுல்தான் அல் நெயாடி, சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த மையத்துக்கு வெளியே சென்று சில பராமரிப்பு பணிகளை செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார்.அவருடன், நாசாவின் இன்ஜினியர் ஸ்டீபன் போவனும் இணைந்தார்.
இருவரும், சர்வதேச மையத்துக்கு வெளியே, விண்வெளியில் நடந்து சென்று, இந்த பராமரிப்பு பணிகளை முடித்துஉள்ளனர். இதன் வாயிலாக விண்வெளியில் நடந்த முதல் யு.ஏ.இ., வீரர் என்ற பெருமையை சுல்தான் பெற்றுள்ளார்.
0 Comments