பண்ணை இயந்திரத் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கிவைத்தார் / The Union Agriculture Minister inaugurated the Farm Machinery Technology Summit
இந்திய தொழில்நுட்பக் கூட்டமைப்பு, டிராக்டர் மற்றும் இயந்திர சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த பண்ணை இயந்திரத் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு தோமர் 85 சதவீத சிறு விவசாயிகள் இயந்திரம் மற்றும் தொழில்நுட்பங்களால் பயனடைவதாகக் கூறினார். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 2014-15-ம் நிதியாண்டு முதல் 2022-23ம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.6,120 கோடி நிதியை மாநிலங்களுக்கு விடுவித்திருப்பதாகக் கூறினார்.
இந்த நிதி வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி வேளாண் பரிசோதனை மையம், உயர் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் பண்ணை இயந்திர வங்கிகள் ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது.
0 Comments