சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்த புதிய விதிகளின் கீழ் தான் விளையாடப்பட உள்ளது.
பிளேயிங் கண்டிஷனில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களின் கீழ் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முதல் போட்டியாக விளையாடப்படுகிறது. இந்தப் போட்டி ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது.
டிவி அம்பயர்களுடன் கள நடுவர்கள் முடிவை பரிசீலிக்கும் போது 'சாஃப்ட் சிக்னல்' கொடுக்க வேண்டிய அவசியமில்லை. முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கள நடுவர்கள், டிவி அம்பயர்களுடன் கலந்து பேசலாம்.
வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு மிக அருகே கீப்பிங் பணியை கவனிக்கும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் நிற்கும் ஃபீல்டர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாகும்.
ஃப்ரீ ஹிட்டில் பந்து ஸ்டம்பைத் தாக்கினாலும் எடுக்கப்படும் ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
0 Comments