Recent Post

6/recent/ticker-posts

2020ம் ஆண்டு குறைப்பிரசவங்களில் பிறந்த குழந்தைகள் குறித்த ஐநா அறிக்கை / UN REPORT ON PREMATURE BABIES 2020

TAMIL

  • ஐக்கிய நாடுகளின் முகவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2020ம் ஆண்டில் பிறந்த அனைத்து குறைப்பிரசவங்களில் சரிபாதி இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய ஐந்து நாடுகளில் நடைபெற்றவைதான்.
  • உலகம் முழுவதும் குறைப்பிரசவங்களில் பிறந்த குழந்தைகளில் 45 சதவீதத்தை அவர்கள் ஒன்றாகக் கணக்கிட்டனர். இது அதிக இறப்பு அபாயத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியத்துக்கான, 'அமைதியான அவசரநிலை' என்பதைக் குறிக்கிறது.
  • 2020ல் மொத்தம் 13.4 மில்லியன் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு மில்லியன் குழந்தைகள் சிக்கல்களால் இறந்துள்ளனர். 
  • மேலும், 2020ம் ஆண்டில், பங்களாதேஷில் மிக அதிகமாக குறை பிரசவ விகிதம் இருந்தது. அதைத் தொடர்ந்து மலாவி மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உள்ளன. 
  • இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும், தலா 13 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 30.16 லட்சம் குழந்தைகளுடன் இந்தியா முதலிடத்திலும், அதையடுத்து பாகிஸ்தான் 9.14 லட்சம், நைஜீரியா 7.74 லட்சம், சீனா 7.52 லட்சமாக உள்ளது. 
  • புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்புக்கான உள்கட்டமைப்பு மிகவும் விரிவானதாகவும், கடைக்கோடி வரைக்கும் இருக்க வேண்டும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.
  • கிராமப்புறங்களில் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் இல்லாதது பற்றிய பொதுவான புகார் உள்ளது. ஆனால், சிறப்புப் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகள், மேம்படுத்தப்பட்ட பிரசவ அறைகள் மற்றும் திறமையான பிரசவங்கள் போன்ற முன்முயற்சிகள் பல முன்கூட்டிய குழந்தைகளைக் காப்பாற்ற உதவி இருக்கின்றன. 
  • ஆனால், அவை இன்னும் வளரவில்லை. இந்தியாவில் குறை பிரசவங்களின் பிராந்தியவாரியான பிரிவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி PloS-Global Public Healthல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மேற்கு வங்கத்தில் 16 சதவிகிதம், தமிழ்நாட்டில் 14 சதவிகிதம் மற்றும் குஜராத்தில் 9 சதவிகிதம் பிறந்ததாகக் கூறி உள்ளது. உலகளாவிய குறைப்பிரசவ விகிதம் 2020ல் 9.9 சதவீதமாக இருந்தது. இது 2010ல் 9.8 சதவீதமாக இருந்தது.

ENGLISH

  • Five countries -- India, Pakistan, Nigeria, China and Ethiopia -- accounted for half of all preterm births in 2020, according to a new report released Tuesday by United Nations agencies and partners.
  • Together they account for 45 percent of preterm births worldwide. It presents a high mortality risk. It also signifies a 'quiet emergency' for the lives and health of children.
  • A total of 13.4 million babies are estimated to have been born preterm in 2020. About one million of these children die from complications. Also, in 2020, Bangladesh had the highest preterm birth rate. 
  • It is followed by Malawi and Pakistan. India and South Africa are estimated at 13 percent each. India tops the list with 30.16 lakh children, followed by Pakistan with 9.14 lakh, Nigeria with 7.74 lakh and China with 7.52 lakh. It is clear from this study that the infrastructure for newborn care needs to be more comprehensive and up to the shop floor.
  • A common complaint is lack of access to health care in rural areas. But initiatives such as specialized neonatal care units, improved delivery rooms and efficient deliveries have helped save many premature babies. 
  • But, they have not yet grown. Regarding the regional distribution of preterm births in India, a report published in PloS-Global Public Health on June 28 last year stated that West Bengal accounted for 16 percent, Tamil Nadu 14 percent and Gujarat 9 percent. The global preterm birth rate was 9.9 percent in 2020. It was 9.8 percent in 2010.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel