16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31 ம் தேதி தொடங்கி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது.
10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் வெற்று வாகை சூடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 'டாஸ்' வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங்கில் களம் இறங்கியது. அதற்குள் மழையும் தொடங்கி விட்டதால் ஓவர் குறைப்பு செய்யப்பட்டது. அதன்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தது. த்ரில் வெற்றியை ருசித்து கோப்பையை கைப்பற்றியது.
சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வெல்வது இது 5வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments