நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், 18 மாதங்களில் இல்லாத அளவில் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் விலை குறைந்ததன் காரணமாக, கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்துள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக இருந்தது.
இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில் 7.79 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு முன், கடந்த 2021 அக்டோபரில், மிக குறைந்த அளவாக 4.48 சதவீதம் எனும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, உணவு பொருட்கள் பிரிவில், பணவீக்கம் ஏப்ரலில் 3.84 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய மாதமான மார்ச்சில் 4.79 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு ஏப்ரலில் 8.31 சதவீதமாகவும் இருந்தது.
நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.
சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம் மற்றும் வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும், குறுகிய கால கடனுக்கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகிறது.
ENGLISH
The country's retail price inflation fell to an 18-month low of 4.7 percent in April, the Central Bureau of Statistics announced. Retail price inflation eased in April last year due to fall in food prices. In March last year, retail price inflation was 5.66 percent.
This has increased to 7.79 percent in April last year. Before this, in October 2021, the lowest rate was 4.48 percent. In the food category, inflation eased to 3.84 percent in April, according to Central Statistics Office data.
This is 4.79 percent in the previous month of March; It was also 8.31 percent in April last year. The RBI has forecast retail price inflation to be 5.2 percent in the current financial year. The RBI formulates its monetary policy based on retail price inflation. Once in two months, the Reserve Bank's Monetary Policy Committee meets and announces its monetary policy.
The 'repo' rate for short-term loans to banks and the 'reverse repo' rate for short-term loans from banks are fixed on the basis of retail price inflation.
0 Comments