Recent Post

6/recent/ticker-posts

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 - காங்கிரஸ் வெற்றி / Karnataka Assembly Election 2023 - Congress Wins

  • கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
  • இதையடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
  • இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 
  • அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
  • இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 65 இடங்களிலும் மஜதா 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 
  • பிரதமர் மோடி மிக தீவிரமான பிரசாரம் மேற்கொண்ட போதிலும் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால், கடைசி நேரத்தில் கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியை தழுவியுள்ளார். 
  • அதே நேரத்தில் கட்சி தாவிய இன்னொரு தலைவரான லட்சுமண் சவதி வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும், குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, ராமநகரில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
  • காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமோக வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 
  • இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel